--- --:--:-- --

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம்..!

6

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதுதொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி சேர்ந்த ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை கொடுத்த வழக்கில் தமிழ்நாடு அரசும் அறிக்கையை தாக்கல் செய்திருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

 

மாற்றுத்திறனாளி வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடுவதற்கான திட்டம் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு விசாரணையை 2 மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon