கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு..!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கரும்பு தோட்டத்தில் இருந்து பதுங்கியிருந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. வாசுதேவநல்லூரை சேர்ந்த ஒருவரது கரும்பு தோட்டத்தில் அறுவடை பணி நடைபெற்றது.
அப்போது தோட்டத்தில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பு பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக வந்த தீயணைப்பு துறையினர் மலை பாம்பை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.






