தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
வளிமண்டல சுழற்சி காரணமாக எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வட தமிழ்நாட்டில் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






