தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்..!
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயக்குமார் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை சைபர் கிரைம் பிரிவு கண்காணிப்பாளராக இருந்த சுதாகர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திற்கு பாஸ்கரன், திருச்சி மாவட்டத்திற்கு பா . மூர்த்தி, ஈரோடு மாவட்டத்திற்கு சசிமோகன், திருப்பூர் மாவட்டத்திற்கு சாஷ்காய் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்திற்கு ஸ்ரீ அபிநவ், கடலூருக்கு சக்தி கணேசன், தென்காசிக்கு கிருஷ்ணராஜ் ஆகியோர் காவல் கண்காணிப்பாளராக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் காவல் துறையின் பல்வேறு பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை சட்டம் ஒழுங்கு துறை ஆணையராக தங்கதுரைகோவை, சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.






