--- --:--:-- --

புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்..!

9

சிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

ஏற்கனவே கேகே நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உள்ள ஆசிரியர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதன் தொடர்ச்சியாக மற்றொரு ஆசிரியர் மீது சுமத்தப்பட்டது.

 

இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது. தற்போது புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் தெரிவித்துள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நேரில் ஆஜராக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon