ஊரடங்கு ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு..!
மேற்கு வங்கத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மாநிலத்தில் ஊரடங்கு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன் படி மேற்கு வங்கத்தில் தற்போது அமலில் உள்ள தளங்களுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.






