கொரொனா நோய்க்கான மருந்து பாம்பு என கூறி பாம்பை சாப்பிட்ட நபர்..!
கொரொனா நோய்க்கான மருந்து பாம்பு என கூறி அதனை கடித்த நபருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேலு என்பவர் வயல் வெளியில் சுற்றித் திரிந்த பாம்பு ஒன்றை எடுத்து கொரொனாவிற்கான அரிய மருந்து பாம்பு கறி எனக்கூறி சாப்பிட்டுள்ளார்.
அதனை மற்றொரு நபர் செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். இதனை கண்ட வனத்துறையினர் பாம்புக்கறி சாப்பிட நபருக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.






