பள்ளிகளில் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை விசாரிப்பதற்கு குழு..!
பள்ளிகளில் பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளன.
முதலில் விதிமுறைகளை உருவாக்குவதற்கான குழுவில் யார் யார் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் இறுதி செய்யப்படுகிறது.
விசாரணை குழு அமைக்கப்பட்ட பிறகு விதிமுறைகள் உருவாக்கும் பணி அடுத்த மூன்று தினங்களில் செய்யப்படுகின்றது. ஒரு வாரத்திற்குள் புதிய விதிமுறைகள் அடங்கிய பரிந்துரை அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






