தடுப்பூசி திட்டத்தில் பிரதமர் மோடி மீது கெஜ்ரிவால் புகார்..!
நாட்டில் கொரொனா தடுப்பூசி திட்டம் ஆறுமாதம் தாமதமாக தொடங்கப்பட்டது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
சொந்த நாட்டு மக்களுக்கு செலுத்தவேண்டிய தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டன என காணொளி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் புகார் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் திட்டம் 6 மாதம் தாமதமாக தொடங்கப் பட்டதாகவும், அதற்கு முன்னரே தொடங்கி இருந்தால் இரண்டாவது அலையில் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம் எனவும் கெஜ்ரிவால் மோடி அரசை சாடியுள்ளார்.
மேலும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து மாநிலங்களும் தடுப்பூசிகளுக்கு தொடர்ந்து போராடி வருவதாகவும் கொரொனாவை அழிக்க அனைத்து மாநில முதல்வர்களும் அரசியலை கடந்து செயலாற்றி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
அதேபோல பிரதமர் பொறுப்பை உணர்ந்து இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






