--- --:--:-- --

தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; ஒரே நாளில் 422 பேர் பலி!

IMG_20210523_195958

தமிழகத்தில் தற்போது 2,94,143 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 42 ஆயிரத்து 344 ஆக அதிகரித்துள்ளது.

 

சென்னையில் இன்று மேலும் 5,169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 25,196 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 27 ஆயிரத்து 733 ஆக உயர்ந்துள்ளது.

 

ஆனாலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon