முன்கள பணியாளரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது..!
சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள முன்கள பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார். சென்னை பூக்கடையை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் மாநகராட்சியில் முன்கள பணியாளராக வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 15ஆம் தேதி இரவு பகுதியில் வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என பரிசோதித்து உள்ளார். அப்போது சதக்கத்துல்லா என்பவர் அந்த பெண்ணிடம் அத்துமீறியதாகத் தெரிகிறது. அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சதக்கத்துல்லாவை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.






