--- --:--:-- --

கொரொனாவால் உயிரிழந்த நடிகை பியாவின் சகோதரர்..!

2

கொரொனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை பியாவின் சகோதரர் சிகிச்சைக்கு பெட் கிடைக்காமல் உயிரிழந்துள்ளதையடுத்து வலைதள வாசிகள் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். வாழ்க்கை என்பது நிச்சயம் அற்றது என்பதை நாளுக்கு நாள் கொரோனா பாடம் எடுத்து வருகிறது.

 

நேற்று உயிரோடு இருந்தவர்கள் இன்று நம்மோடு இல்லை. யார் எங்கே எப்போது என்று தெரியாமல் மண் குடிசைகளில் இருப்பவர்கள், மாடமாளிகைகளில் வசிப்பவர்கள் என யாராக இருந்தாலும் சரி தினமும் கொரோனாவால் மடிந்து கொண்டிருக்கின்றனர்.

 

டெல்லி , மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் மயானங்களில் ஹவுஸ்புல் போர்டு மாட்டி வைத்துள்ளனர் . தகனமேடை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் செய்வதறியாது திகைத்துக் கொண்டு உள்ளனர்.

 

மண் குடிசைகளில் இருப்பவர்கள் மாட மாளிகைகளில் வசிப்பவர்கள் என்று யாராக இருந்தாலும் சரி தினமும் மடிந்து கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் ஆனந்த் சார் இறந்துவிட்டாரா என்னால நம்பவே முடியல. யாராவது இது உண்மையான செய்தி அல்ல வதந்தி என்று சொல்லுங்களேன் என்று நடிகை பியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதறி இருந்தார். பியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது சகோதரர் இப்போது உயிரோடு இல்லை என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon