ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று விபத்தில் சிக்க முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர்..!
ஆந்திர மாநிலம் பாட்னாவில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்று விபத்தில் சிக்க முயன்ற பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் நொடிப்பொழுதில் விழித்து காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருப்பதி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய ஒரு தம்பதியினர் தூக்கத்தின் காரணமாக அங்கு இறங்க தவறியதாக கூறப்படுகிறது. அடுத்த நிலையத்தில் நிறுத்தம் இல்லாததால் ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த நிலையில் உள்ளதாக கணவர் இறங்கிவிட்டார்.
இதனையடுத்து மனைவி இறங்கும்போது கால் தவறிக் கீழே விழுந்த நிலையில் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர் சதீஷ் உடனடியாக அவரை வெளியே இழுத்து ரயிலடியில் சிக்காமல் காப்பாற்றியுள்ளார்.






