--- --:--:-- --

மூன்றாவது முறையாக முதலமைச்சராக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்பு..!

7

மேற்குவங்க மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறை முதலமைச்சராக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்கவுள்ளார். மேற்குவங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 213 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது.

 

ஆளும் கட்சிக்கு கடும் போட்டியாக கருதப்பட்ட பாஜக எழுபத்தி ஏழு இடங்களை கைப்பற்றியது. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் தலைநகர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

 

இதில் கட்சியின் சட்டமன்ற தலைவராக மம்தா பானர்ஜி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் .

 

ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததை தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராக மம்தா பானர்ஜி இன்று பதவியேற்க உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon