படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்..!
அண்ணாத்த படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ரஜினிகாந்த் இந்த வாரம் சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
கொரொனா ஊரடங்கால் படக்குழுவினர் பாதிப்பு என பல தடைகளை கடந்து நடைபெற்று வரும் அண்ணாத்த படப்பிடிப்பை மே 10ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் ஓரிரு நாட்களில் படமாக்கப்பட்டு விடும் என்று படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் இந்த வார இறுதியில் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





