பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை – முழு ஊரடங்கு அறிவிப்பா..?
நாடு முழுவதும் பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் காலை பதினொரு மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவது, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துகள் இருப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். பெருந்தொற்று கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




