அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை..!
தமிழகத்தில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை வழங்கினார்.
இதில் தலைமைச் செயலாளர் உடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால் அவை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






