--- --:--:-- --

டிவிட்டரில் கேள்வி கேட்ட காதலனுக்கு பதிலை கூறிய போலீஸ்..!

7

மும்பையில் தனது காதலியை சந்திக்க எந்த ஸ்டிக்கர் ஒட்டி செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நபருக்கு காவல்துறை டுவிட்டரில் அளித்த பதிலை ஆனந்த் மகேந்திரா, நடிகர் மாதவன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 

கொரொனா பரவலை தடுக்க வாகன போக்குவரத்து கட்டுப்பாட்டு மும்பையில் அமலில் உள்ள நிலையில் அஸ்வின் வினோத் என்பவர் இந்த கேள்வியை கேட்டிருந்தார்.

 

அதற்கு இந்த பிரச்சனை அவருக்கு அத்தியாவசியமானது என்பதை புரிந்துகொள்ள முடிவதாகவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக தங்களது அத்தியாவசிய அவசியத் தேவைகளில் இது குறிப்பிடப்படவில்லை எனவும் மும்பை காவல்துறை டுவிட்டரில் பதில் அளித்துள்ளது.

 

மேலும் பிரிவு என்பது நேசத்தை அதிகரிக்கும் என்றும் தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon