--- --:--:-- --

குழந்தை பிரசவித்த பெண்ணை கீழே தள்ளிய பெண் ஊழியர்..!

4

நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தை பெற்ற தாயை ஸ்டிரெச்சரில் இருந்த பெண் ஊழியர் தள்ளிவிட்ட சம்பவம் கண்டனக் குரலை எழுப்பியுள்ளது. நாகை மாவட்டம் திட்டச்சேரி தேவகி கிராமத்தை சேர்ந்த முருக வள்ளி என்கிற பெண் பிரசவத்திற்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.

 

அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்த நிலையில் முருக வள்ளிக்கு கொரொனா பரிசோதனை எடுக்கப்பட்டது. முடிவு வருவதற்குள் கொரொனாவார்டில் சேர்க்கப்பட்ட அவருக்கு தொற்று இல்லை என்று சோதனை முடிவு வந்த நிலையில் வேறு வார்டுக்கு மாற்ற மருத்துவமனை பணியாளர் ஒரு ஸ்டிரெச்சரில் ஏற்றிய உடனே கீழே தள்ளிவிட்டு ஒருமையில் சாடியுள்ளார்.

 

சம்பவம் குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீனிடம் கேட்டபோது மருத்துவ கல்லூரி முதல்வரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon