--- --:--:-- --

மத்திய அரசின் மோசமான திட்டமிடலே ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு காரணம்..!

6

மத்திய அரசின் மோசமான திட்டமிடலே கொரொனா தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கு காரணம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

 

தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள பிரியங்கா காந்தி உலகில் அதிகளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட நாடான இந்தியாவிலேயே தட்டுப்பாடு ஏற்படுகிறதா என வினவினார். கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை மத்திய அரசு 6 குழந்தைகளை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

 

அந்த நேரத்தில் 3 முதல் 4 கோடி இந்தியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மோசமான திட்டமிடலே நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்றும் இது மத்திய அரசின் தோல்வி என்றும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon