ஏடிஎம் கார்டுகளை திருடி பணம் அபகரித்த பெண்..!
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஏடிஎம் கார்டுகளை திருடிய பணத்தை அபகரித்து வந்த இளம்பெண்ணை மதுரை காவல்துறையினர் கைது செய்தனர். எல்லிஸ் நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஆதி ஜெகநாதன் படமெடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்ற போது அங்கிருந்த ஒரு இளம்பெண் உதவி செய்வதாக கூறி ஏடிஎம் கார்டில் ரகசிய எண்ணை கேட்டறிந்துள்ளார்.
பின்னர் ஏடிஎம் எந்திரத்தில் பணம் வரவில்லை என்றும் பக்கத்திலுள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்துத் தருவதாகவும் கூறி விட்டு அந்த பெண் மாயமாகியுள்ளார். ஆதி ஜெகநாதனின் கணக்கிலிருந்து 68 ஆயிரத்து 660 ரூபாய் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இது குறித்த புகாரில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தால் எஸ் எஸ் காலனி காவல் துறையினர் மதுரை புறநகரில் சுற்றித் திரிந்த அந்த பெண்ணை கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த மணிமேகலை என்ற அந்தப் பெண் மீது ஏற்கனவே தேனி உசிலம்பட்டி அருப்புக்கோட்டை காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளது.
இரண்டு முறை சிறை சென்றதும் தெரிய வந்ததால் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஏடிஎம் கார்டுகளை திருடிய பணத்தை அபகரித்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.






