--- --:--:-- --

பெண்கள் குறித்து லியோனி கூறிய கருத்துக்கு திமுக வேட்பாளர் வருத்தம்..!

12

பெண்கள் குறித்து திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கூறிய கருத்துக்கு தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட திண்டுக்கல் லியோனி வெளி நாட்டு மாடுகளின் பால் தரமற்றவை என்று குறிப்பிடும்போது பெண்களை உதாரணம் காட்டி பேசியது சர்ச்சையாக வெடித்தது.

 

இந்த நிலையில் தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது திண்டுக்கல் லியோனி கூறிய கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும அந்த உதாரணம் தேவையற்றது என்றும் கார்த்திகேய சிவசேனாபதி கூறினார்.

Leave a Reply

Right Menu Icon