--- --:--:-- --

மோடியின் ஐந்து விரல்களாக செயல்படுவதாக சீமான் குற்றச்சாட்டு..!

3

நீதிமன்றம், தேர்தல் ஆணையம், வருமான வரி உள்ளிட்ட தன்னிச்சை அதிகாரம் பெற்ற துறைகள் மோடியின் ஐந்து விரல்களாக செயல்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

 

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தேர்தல் பறக்கும் படையினர் நெடுஞ்சாலைகளில் நின்றுகொண்டு வணிகர்கள் எடுத்துச்செல்லும் பணத்தை பறிமுதல் செய்கிறார்கள். ஆனால் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதற்காக திமுக ஒன்றிணைவோம் என்ற போர்வையில் பணத்தை ஆங்காங்கே குவித்து வருவதாக தெரிவித்தார்.

 

அதிமுகவும் முதலமைச்சர் பிரச்சாரம் என்ற பெயரில் பணத்தை எங்கு எடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமோ அங்கு பணத்தை கொண்டு போய் சேர்த்து விட்டதாகவும் சீமான் குறிப்பிட்டார்.

 

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை அங்கீகாரம் செய்வதைப் போன்று தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு உள்ளதாக கூறிய சீமான் தேர்தல் ஆணையம், நீதிமன்றம், வருமான வரித்துறை உள்ளிட்ட தன்னிச்சை அதிகாரம் பெற்ற துறைகள் மோடியின் ஐந்து கிளைகளாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

 

இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எந்தவித வேறுபாடும் கிடையாது என தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon