கைது செய்யப்பட்ட 40 மீனவர்கள் வீடு திரும்பியுள்ளனர்..!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மற்றும் ராமநாதபுரம் மீனவர்கள் 40 பேர் வீடு திரும்பியுள்ளனர். இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக நாகப்பட்டினம் ராமநாதபுரம் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 54 மீனவர்கள் மற்றும் ஐந்து விசைப் படகுகளை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும் மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் மீனவர்களை விடுதலை செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.
40 மீனவர்கள் சொந்த ஊர் திரும்பிய நிலையில் நீதிமன்ற காவலில் வைத்துக்கொள்ள காரைக்கால் நீதிமன்றத்தில் 14 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






