--- --:--:-- --

மார்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதியாகும் ஓட்டுநர் உரிமத்திற்கு அவகாசம் நீட்டிப்பு!..!

5

மார்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதி ஆகும் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன அனுமதி புதுப்பித்தல் ஆவணங்கள் ஜூன் 30ஆம் தேதி வரை செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

 

அதில் வரும் 31-ஆம் தேதி நிறைவடையவுள்ள கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதியுடன் முடிந்த வாகனங்களுக்கான அனுமதி ஓட்டுநர் உரிமம் வாகனப்பதிவு ஆகியவற்றுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

கொரொனா பொது முடக்கத்தின் போது போக்குவரத்து அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகன அனுமதி மற்றும் ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்ய முடியாமல் தவித்து வந்ததையடுத்து தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon