ராணுவ வலிமையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியா..!
இந்தியா ராணுவ வலிமையில் உலகில் நான்காவது இடத்திலும் பாதுகாப்பு துறை நிதி ஒதுக்கீட்டில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. ராணுவத்திற்கான நிதி ஒதுக்கீடு படைவீரர்களின் எண்ணிக்கை, படைக்கலன்கள், கருவிகள், படை வீரர்களின் ஊதியம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை பட்டியலை தயாரித்துள்ளது.
சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன .ரஷ்யா மூன்றாவது இடம்இடத்திலும் இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளது. 5வது இடத்திலும் பிரிட்டன், பிரான்ஸ் 6வது இடத்திலும் உள்ளன.
பாதுகாப்பு துறை நிதி ஒதுக்கீட்டில் அமெரிக்கா, சீனா ,இந்தியா ஆகிய அனைத்தும் முதல் மூன்று இடங்களில் உள்ளன. அமெரிக்கா ஆண்டுகள் 53 லட்சம் கோடி ரூபாயும், சீன 18 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாயும்,இந்தியா ஐந்து லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாயும் பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்குகின்றன.






