--- --:--:-- --

தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது..!

1

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் ஆறாம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது.

 

கடைசி நாள் வரை 7 ஆயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவை அனைத்தும் நேற்று முன்தினம் பரிசீலிக்கப்பட்டன. தாக்கல் செய்யப்பட்ட 7,250 மடுக்களில் 2,727 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 4 ஆயிரத்து 550 மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.

 

சில தொகுதிகளில் விவரங்கள் இன்னும் இணையதளத்தில் பதிவு செய்யப்படவில்லை. இதற்கிடையே துறைமுகம் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் செல்வம் மனு ஆய்வுக்குப்பின் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

முன்னதாக பாரதிய ஜனதா வேட்பாளரின் மனு முறையாக இல்லை எனக் கூறி திமுக வேட்பாளரும், சுயேச்சை வேட்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் இதே தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் முகமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

 

தேர்தல் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாததால் முகமதை தகுதிநீக்க பட்டியலில் இடம் பெற்றிருப்பதாகவும் எனவே அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற இன்று கடைசி நாளாகும். வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்ற பின் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எந்தெந்த தொகுதிகளில் எத்தனை வேட்பாளர்கள் களம் காண்கின்றனர் என்பது அப்பொழுது தெரியவரும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon