--- --:--:-- --

தஞ்சாவூரில் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கொரொனா பரிசோதனை..!

7

ஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளில் பயிலும் சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் 93 பேருக்கும் மற்றும் ஆசிரியர்கள் 16 பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்திலுள்ள 439 பள்ளிகளில் 9, 10, 12 ஆம் வகுப்பு பயிலும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 185 மாணவ, மாணவிகளுக்கு கொரொனா பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ள மாவட்ட நிர்வாகம் அதற்காக 14 கண்காணிப்பு குழுவையும் அமைத்துள்ளது.

 

உறுதிசெய்யப்பட்ட பள்ளிகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon