--- --:--:-- --

சொத்து தகராறில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த தம்பி..!

1

சேலம் அருகே சொத்து தகராறில் சொந்த அண்ணனை துப்பாக்கியால் தம்பி சுட்டுக் கொலை செய்துள்ளார். குடும்ப சொத்தாக காலி வீட்டு மனை ஒன்றை அமைப்பது தொடர்பாக புதூரை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் அவரது தம்பியான சந்தோஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

பெற்றோர் வீட்டில் செல்வம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சந்தோஷ் வீட்டின் ஜன்னல் வழியாக முயல் வேட்டைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியால் செல்வத்தை சுட்டுவிட்டு தப்பியுள்ளார்.

 

குண்டுகள் பாய்ந்த நிலையில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புகாரின் பேரில் விரைந்த போலீசார் துப்பாக்கியை கைப்பற்றியதுடன் தலைமறைவாக உள்ள சந்தோஷ தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon