--- --:--:-- --

அஜீத்தின் பிறந்தநாளான மே 1ஆம் தேதி வெளியாகிறது வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை..!

6

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை மே 1ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து வினோத், அஜித்குமார் போனி கபூர் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வலிமை.

 

படப்பிடிப்பு தொடங்கி 16 மாதங்கள் கடந்தும் முதல் பார்வை வெளியாகாததால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். அதனால் தயாரிப்பாளர் கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் முதல் பார்வை வெளியிடப்படும் என்று அஜித் குமார் அறிக்கை மூலமாக ரசிகர்களுக்கும் கூறினார்.

 

இந்த நிலையில் அஜீத்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வறுமை திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடவிருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகமடையைச் செய்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon