--- --:--:-- --

அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரொனா தடுப்பூசி தற்காலிக நிறுத்தம்..!

3

அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரொனா தடுப்பு மருந்து பயன்படுத்துவதை ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் நிறுத்தி வைத்துள்ளன. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சிலருக்கு ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

 

இந்தநிலையில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகள் அதன் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். தடுப்பூசி போடப்பட்ட 7 பேருக்கு மூளையில் ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதன் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

 

நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டை இரண்டு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக ஸ்பெயின் கூறியுள்ளது. ரத்தம் உறைதல் பிரச்சினைக்காக டென்மார்க் உள்ளிட்ட வேறு சில ஐரோப்பிய நாடுகளும் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தி வைத்திருந்தனர்.

 

மருந்து பயன்பாடு குறித்து முடிவெடுக்க வரும் நாளை மறுநாள் அவசர ஆலோசனை நடத்த ஐரோப்பிய யூனியன் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு திட்டமிட்டுள்ளது. ஐரோப்பாவில் ஒரு கோடியே 70 லட்சம் பேருக்கு தங்கள் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அவர்களில் 37 பேருக்கு மட்டும் பிரச்சினை இருப்பதாக அறிவித்துள்ளது.

 

ஆனால் ரத்தம் உறைவதற்கு தங்கள் மருந்துதான் காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 37 பேருக்கு ரத்தம் உறைதல் இருந்ததற்கும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதனை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon