காசு கொடுத்தால்தான் ஓட்டு போடுவேன் என கூறும் யோகி பாபு..!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு காசு கொடுத்தால்தான் ஓட்டு போடுவேன் என பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு. தற்போது ஹீரோவாக மண்டலா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
ஒய்நாட் ஸ்டுடியோ சசிகாந்த் வழங்க இயக்குனர் பாலாஜி மோகன் தயாரிக்கும் திரைப்படத்தில் புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
யோகிபாபு தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதற்காக வெளி நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட யோகிபாபு நெல்சன் மண்டேலா என பெயர் வைத்துள்ளதால் அதிகாரிகள் சந்தேகம் கொள்கின்றனர்.
ஒரு கட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களிடமும் ஓட்டுக்கு காசு வாங்கிய யோகிபாபு நோட்டாவை பார்த்துவிட்டு மூன்றாவது நபர் ஒருவர் இருக்கிறார். அவர்காசு தரவில்லை காசு கொடுத்தால்தான் ஓட்டு போடுவேன் என நகைச்சுவையாக கூறியுள்ளார். டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து வீடியோ வைரலாகி வருகிறது.






