--- --:--:-- --

நீண்ட இழுபறிக்கு பிறகு காங். வேட்பாளர்கள் அறிவிப்பு… குமரியில் விஜய் வசந்த்!

Congress 02

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல், நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று நள்ளிரவு வெளியானது.

 

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. அந்த கட்சிக்கு குமரி லோக்சபா தொகுதியுடன் 25 சட்டசபைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், தொகுதிகள் பெறுவதில் காங்கிரஸின் பல்வேறு கோஷ்டிகள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. சீட் பெற நீயா – நானா மோதல் சத்தியமூர்த்தி பவனிலும் நேற்று எதிரொலித்தது.

 

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று மட்டும் 3 கோஷ்டிகள் தனித்தனியாக போராட்டம் நடத்தினர். எனினும் அடிதடியோ, வேட்டி சட்டை கிழிப்பு நடக்காமல் சுமுகமாக முடிந்தது. இதன்பின்னர், டெல்லியில் கட்சி மேலிடம் வேட்பாளர்கள் பட்டியலி இறுதி செய்வதற்கு நேற்றிரவு கூடியது.

 

தீவிர ஆலோசனைகள், நீண்ட இழுபறிக்கு பின், நேற்று நள்ளிரவில் முதல் பட்டியலை, காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல்வாஸ்னிக் நேற்று இரவு, 11:15 மணிக்கு வெளியிட்டார். 25 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு:

 

கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த்.

 

சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள்:

 

1. பொன்னேரி- துரை சந்திரசேகர்
2. ஸ்ரீபெரும்புதூர்- செல்வபெருந்தகை
3. சோளிங்கர்- முனிரத்தினம்
4. ஊத்தங்கரை- ஆறுமுகம்
5. கள்ளக்குறிச்சி- மணிரத்தினம்
6. ஒமலூர்- மோகன் குமாரமங்கலம்
7. ஈரோடு கிழக்கு- இளங்கோவன் மகன் திருமுகன் ஈவேரா
8. உதகமண்டலம்- கணேஷ்
9. கோவை தெற்கு- மயூரா ஜெயக்குமார்
10. உடுமலைப்பேட்டை- தென்னரசு
11. விருத்தாசலம்- ராதாகிருஷ்ணன்
12. அறந்தாங்கி- திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன்
13. காரைக்குடி- மான்குடி
14. மேலூர்- ரவிசந்திரன்
15. ஸ்ரீவில்லிபுத்தூர்- மாதவ ராவ்
16. சிவகாசி- அசோகன்
17. திருவாடனை- கருமாணிக்கம்
18. ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ்
19. தென்காசி- பழனி நாடார்
20. நாங்குநேரி- ரூபி மனோகரன்
21. கிள்ளியூர்- ராஜேஷ்குமார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon