விஜய் மல்லையாவை சட்டப்படிதான் நாடு கடத்த முடியும்..குறுக்கு வழிகளை நாட முடியாது..!
விஜய் மல்லையாவை சட்டப்படிதான் நாடு கடத்த முடியும் என்றும், அவசரத்திற்காக குறுக்கு வழிகளை நாட முடியாது என பிரிட்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய விஜய் மல்லையா அதனை திருப்பி செலுத்தாமல் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிநாடு தப்பி சென்றார்.
அவரை நாடு கடத்த பிரிட்டன் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பிரிட்டன் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது. ஆனால் விஜய் மல்லையா இதுவரை நாடு கடத்தப்படாமல் உள்ளார். இது குறித்து பேசிய இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் அலைஸ் குற்றவாளி ஒருவரை நாடு கடத்துவது என்பது நிர்வாக மற்றும் நீதித்துறை இணைந்து மேற்கொள்ளும் பணி என்று தெரிவித்தார்.
மல்லையா விவகாரத்தில் நிர்வாக ரீதியிலான பணிகளை பிரிட்டன் அரசு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
நீதித்துறையின் பங்கும் இதில் இருப்பதால் அனைத்தும் சட்ட விதிமுறைகளின்படி தான் நடக்கும் என்றும் அவசரத்திற்காக குறுக்குவழியில் நாடு கடத்தும் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். அது நீதிபதிகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.






