--- --:--:-- --

இருசக்கர வாகனத்தில் 6 பேர் அமர்ந்து சென்ற வீடியோ..!

10

கோவையில் இருசக்கர வாகனத்தில் 6 பேர் அமர்ந்து பயணித்து சாகசம் செய்த வீடியோ வைரலானதையடுத்து அதில் பயணித்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 

கோவை அருகே இரு சக்கர வாகனம் ஒன்றில் 6 பேர் அமர்ந்து பயணித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் 6 பேர் பயணம் செய்தது பதிவாகியிருந்தது.

 

இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபருடன் 3 பேர் அமர்ந்தும் இருவர் நின்று நிலையிலும் சென்று கொண்டிருந்தனர். இதனை இரு சக்கர வாகனத்தில் பின்னால் சென்ற கார் ஒன்றில் இருந்து வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

 

வீடியோ எடுத்தவர்கள் பேச்சின் மூலம் குறிப்பிட்ட இரு சக்கர வாகனம் சரவணம்பட்டியில் சென்றது தெரியவந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் குறிப்பிட்ட இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டுமெனவும் சாலையில் சாகசம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநகர போக்குவரத்து துணை ஆணையர் முத்தரசு உத்தரவிட்டார்.

 

சாலை விதிமுறைகளை மீறி இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் சாகச வீரர்களை போலீசார் தேடி வருகின்றன.

Leave a Reply

Right Menu Icon