--- --:--:-- --

பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்..!

6

மிழகம் உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

பொதுமக்கள் குறைந்த அளவிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டு இருப்பதால் அதனை அதிகரிப்பதற்கு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

 

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

 

கூட்டத்தில் பேசிய அவர் தயக்கமின்றி தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தமிழகம் உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon