--- --:--:-- --

மகளை காதலித்த இளைஞரை கொலை செய்த தந்தை..!

3

சூரில் மகளை காதலித்த இளைஞரை திருமணம் செய்து வைப்பதாக கூறி தமிழகத்திற்கு அழைத்து வந்து கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தான்றபள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

 

இவரது பக்கத்து கடையை சிறந்த நவீன் என்ற இளைஞர் பக்கத்து கடைக்காரரின் மகளை காதலித்து வந்துள்ளார். பலமுறை கண்டித்தும் அவனின் காதல் தொடர்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன் ஓசூர் அருகே தான்றபள்ளி கிராமத்தில் தனது உறவினர்கள் இருப்பதாகவும் அங்கு வந்தால் உறவினர்களோடு ஆலோசித்து பேசலாம் என்றும் கூறி அழைத்து வந்துள்ளார்.

 

தான்றபள்ளியில் நேற்று அவருடன் சேர்ந்து மது அருந்திய லக்ஷ்மணன் அதிக போதையில் இருந்தவரை உருட்டுக்கட்டை மட்டும் கற்களை கொண்டு தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த நவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

 

இதையடுத்து இன்று காலை லட்சுமணன் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். கொலை நடந்த இடத்திற்கு வந்து நவீன் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது சாதி ஆணவக் கொலைகள் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Leave a Reply

Right Menu Icon