--- --:--:-- --

பணத்திற்காக 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்..!

5

ணத்திற்காக 7 பேரை திருமணம் செய்து ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மயிலாடுதுறை மகளிர் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள மணக்குடியை கிராமத்தை சேர்ந்தவர் பாலகுரு.

 

இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரஜப்நிஷா என்ற பெண்ணுடன் முகநூலில் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு சேந்த குடியில் உள்ள சிவப்பிரியா நகரில் இருவரும் வசித்து வந்துள்ளனர்.

 

ஓட்டுநராக வேலை செய்யும் பாலகுரு மனைவியை தனியாக விட்டுவிட்டு அடிக்கடி வெளியூர் சென்று உள்ளார். அப்போது ரஜப்நிஷா பேஸ்புக் மூலம் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். நிஷா மீது சந்தேகமடைந்த பாலகுரு மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தபோது அதில் மனைவிக்கு பலருடன் திருமணம் நடைபெற்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 

இதுகுறித்து கேட்டபோது பணத்திற்காக பலரை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் பாலகுருவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அவரை திருமணம் செய்து ஏமாற்றிய மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon