--- --:--:-- --

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருகை..!

5

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வந்த பிறகு அதிமுக பாஜக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சசிகலா குறித்தும் பேச வாய்ப்பிருக்கிறது என்று வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதிமுகவும் பாஜகவும் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பது உறுதியாகி விட்டது. ஆனால் வேறு எந்தக் கட்சிகளும் உள்ளே, யாரெல்லாம் வெளியே என்பதுதான் தற்போது முக்கியமான கேள்வி. அதற்கு பிரதமர் மோடியின் வருகை தீர்வுகாணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்தாண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் அதிமுக பாஜக கூட்டணியை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உறுதி செய்தார். அதனை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆமோதித்தார்.

 

ஆனால் பாஜக தரப்பில் எதுவும் சொல்லாத நிலையில் கடந்த மாதம் மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் தேசிய தலைவர் நட்டா அதிமுகவுடன் கூட்டணி உறுதிப்படுத்தினார். இந்த நிலையில் அதிமுகவுடன் சம்மதம் முடிந்துவிட்டது.

 

நகை, ரொக்கம் பற்றி பேச வேண்டியுள்ளதாக கூறியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் இல கணேசன். ஞாயிறு தமிழகம் வரும் பிரதமர் மோடி அரசு விழாவை தொடங்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ‌பி‌எஸ் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க உள்ளார் என்றும் அப்போது கூட்டணி இறுதி வடிவம் பெறும் எனவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon