காதலியுடன் தனிமையில் இருந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த காதலன்..! காதலி தற்கொலை..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தன்னுடன் தனிமையில் இருந்த வீடியோவை காதலன் நண்பர்களுக்கு பகிர்ந்தால் அவமானத்தில் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் காதலன் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
பேரண்டம்மாள் தெருவை சேர்ந்த கல்லூரி முதலாமாண்டு மாணவிக்கு சமூக வலைதளங்கள் மூலம் கோவில்பட்டியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் அறிமுகமாகி காதலனாக மாறியுள்ளான்.
இருவரும் தனிமையில் சந்தித்து எல்லை மீறியதை வீடியோவாக பதிவு செய்து கொண்ட விக்னேஸ்வரன் அதனை பெருமையாக தனது நண்பர்களுக்கு பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவருடன் பேசுவதை மாணவி நிறுத்தியுள்ளார்.
தன்னுடன் காதலை தொடரவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படும் நிலையில் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.






