அமைச்சர்கள் ஏன் பதற்றமடைகிறார்கள்?- டிடிவி தினகரன் கேள்வி..!
சசிகலாவை வரவேற்க மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீது அன்பு கொண்டவர் தயார் ஆகும் நிலையில் அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேர் பதற்றம் அடைகிறார்கள் என்று அமாமு க வின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் தான் பேசியதை எல்லாம் திரித்து அமைச்சர் பதவியில் இருப்பதையும் மறந்து நிதானமின்றி உண்மைக்குப் புறம்பாக பேசி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க இவர்களே செய்துவிட்டு உண்மை தொண்டர்கள் மீது பழி போட சதி செய்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பிய டிடிவி தினகரன், அதிமுக மீதான உரிமை தொடர்பாக சசிகலா தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை மறைத்துவிட்டு பேசி வருகிறார்கள் என்றும் இவர்களின் பேச்சை எல்லாம் மக்களும் உண்மை தொண்டர்களும் முகம் சுளித்தபடி பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.






