செவ்வாய் கோளை 22 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்த புகைப்படம்..!
சீனாவின் டியான் 1 விண்கலம் செவ்வாய் கோளை 22 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் பல கோடி கிலோமீட்டர்கள் பயணத்திற்கு பிறகு வரும் பத்தாம் தேதி செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில் நுழைகிறது.
லேண்டர், ரோவர் ,ஆர்பிட்டர் என மொத்தம் ஐந்து டன் எடை கொண்ட இந்த விண்கலம் எடுத்துள்ள செவ்வாயின் கருப்பு வெள்ளை புகைப்படம் அந்த கிரகத்தில் தரை அமைப்புகளை கழுகுப் பார்வையில் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.






