இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளை தேர்வு செய்தார் மு க ஸ்டாலின்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார் மு க ஸ்டாலின்
தி மு க மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ சிலையை மு க ஸ்டாலினிடம் வழங்கி வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்திற்கு வருகை தந்து மனு கொடுத்த மனுவை பொதுமக்கள் முன்னிலையில் தேர்வு செய்து அவர்களிடம் இருந்த குறைகளை கேட்டறிந்தார் இதில் மொத்தம் ஒன்பது நபரை தேர்வு செய்தார் மு க ஸ்டாலின். மேலும் திருவாடானை சட்டமன்றத் தொகுதி ஆறு நபர் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி இரண்டு நபர் பரமக்குடி சட்ட மன்றத் தொகுதி ஒரு நபர் என்று தேர்வு செய்தார். இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஒரு நபர் கூட தேர்வாகவில்லை. இதனால் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி மக்கள் ஸ்டாலினிடம் பேச முடியவில்லை என்று வருந்துவதாக சிலர் பேசிக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து தி மு க தலைவர் மு க ஸ்டாலின் பேசியதாவது :
வரும் சட்ட மன்ற தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன் ஆனால் தற்போது மக்கள் ஆதரவை பார்க்கும் போது 234 தொகுதிகளிலும் தி மு க வெல்வது நிச்சயம் ஆட்சிக்கு வந்ததும மக்களின் 100 நாட்களில் நிறைவேற்றுவேன்.

புயல் , வெள்ளத்தால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டும் மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்கவில்லை இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசிடமிருந்து தலா ரூ 5 கோடி பெற்றுத்தர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.
முதல்வர் துணை உள்பட அமைச்சர்களின் ஊழல் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் சட்டப்பேரவைக் கூட்டத்தைப் புறக்கணித்தோம் முதல்வர் பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் ரூ 3,000 கோடி வரை ஊழலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளோம் இது தொடர்பாக சிபிஐயின் விசாரணை யை எதிர்கொள்ளாமல் முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளார் . ஊழலில் முதலிடத்தில் இருப்பவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிதான் அதிமுக அரசு சிறுபான்மையினரின் உரிமையைப் பறித்தது ஈழத்தமிழர் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை.தமிழரின் வாழ்வுரிமையை வரும் தேர்தலில் மீட்டெடுப்போம் எனப் பேசினார்.
மேலும், திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தளிர் மருங்கூர் கிராமத்தை சேர்ந்த மாற்று திறனாளி (பார்வையற்றவர்) 2013 ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் இதுவரை அரசு பணி வழங்க மறுத்து வருகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் ஸ்டாலினை தொட்டு பார்க்க வேண்டும் ஆசைப்பட்டார். அதையடுத்து உடனடியாக மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து கை குலுக்கி ஆறுதல் தெரிவித்தார். இந்நிகழ்வு அனைவரையும் நெகிழ வைத்தது.






