வயதான பெண்களை குறிவைத்து நடத்தப்பட்ட சம்பவம்..!
மதுரையில் கோவில் விழாக்களில் வயதான பெண்களை குறிவைத்து நகை திருட்டில் ஈடுபட்ட நான்கு பெண்களை 24 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரையில் கோவில் விழாக்களில் வயதான பெண்களை குறிவைத்தும், கூட்ட நெரிசலை பயன்படுத்தியும் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள 18 சவரன் தங்க நகைகள் திருடு போனதாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
புகார் கொடுக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே விசாரணையை தொடங்கிய போலீசார் ஆட்டோவில் சென்ற நான்கு பெண்களையும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 4 பேரும் நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்த 15 சவரன் தங்க நகைகளை கைப்பற்றிய போலீசார் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் தங்க நகைகளை திருடிய பெண்களை கைது செய்த காவல் துறைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.







