--- --:--:-- --

விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மோடியின் சகோதரர்..!

4

விமான நிலையத்தில் தனது ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பிரதமர் மோடியின் சகோதரர் அங்கேயே 2 மணிநேரம் தர்ணாவில் ஈடுபட்டார். பிரதமர் மோடியுடன் சகோதரரான பிரகலாத் மோடி நேற்று மாலை உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ விமான நிலையம் வந்தார்.

 

அப்போது அவரை வரவேற்பதற்காக வந்த ஆதரவாளர்களை உள்ளே நுழைய போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பிரகலாத் மோடி விமான நிலையத்திலேயே அவர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளார்.

 

பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது ஆதரவாளர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் சகோதரர் சட்டங்களை மதிக்காமல் விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon