--- --:--:-- --

போட்டோஷூட்டுக்காக சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

20

பத்தான கல் குட்டையை சுற்றுலாத்தலம் போல சித்தரித்து சிலர் இணையத்தில் பதிவேற்ற அதனை பார்த்து அங்கு புகைப்படம் எடுக்க சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

திருவள்ளூரை சேர்ந்த ஆகாசும், ஆவடியை சேர்ந்த தினேஷ் குமார் விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு இணையத்தில் பலவகையான லொகேஷன்களை தேடி அங்கு சென்று புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்துள்ளனர்.

 

அப்படி திரிசூல பகுதியில் உள்ள இந்த கல் குட்டை அவர்களின் கண்களில் தென்பட்டுள்ளது. அதனை சுற்றுலாத்தலம் என எண்ணி மற்றொரு நண்பனையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றவர்கள் போட்டோசூட்டின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது.

 

பல மணி நேரம் போராடி இருவரது உடல்களும் மீட்கப்பட்டன. கல்குட்டை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon