பெண் ஊழியருடன் தனிமையில் இருந்த பாதிரியார்..!
நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகம் ஒன்றில் பாதிரியார் ஒருவர் பெண் ஊழியருடன் தனிமையில் இருப்பதை பார்த்து விட்டதால் சமையல்கார பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் எனும் ஊரில் இளைஞர் மற்றும் முதியோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு சுமார் 30க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறியவர்கள் மற்றும் முதியவர்கள் தங்கியுள்ளனர். குமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் என்னும் பாதிரியார் நிர்வாகம் செய்து வருகிறார். திசையன்விளை அருகே உள்ள முது முத்தான் குளித்தலையில் தெருவைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவர் பல வருடங்களாக காப்பகத்தில் சமையல் வேலை செய்து வந்தார்.
ஜோசப்புக்கும் அங்கு பணியாற்றும் ஜெயலட்சுமி என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 25ஆம் தேதி காப்பகத்தில் உள்ள தனியறை ஒன்றில் ஜோசபுடன் அந்த பெண் தனிமையில் இருந்ததை எதிர்பாராதவிதமாக ராஜம்மாள் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஜோசப் மற்றும் ஜெயலட்சுமி ஆகியோர் சேர்ந்து ராஜம்மாளை தாக்கியதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த ராஜம்மாளிடம் விசாரணை நடத்தினார்.
ஜெயலட்சுமி உடன் ஜோசப் தனிமையிலிருந்ததை பார்த்ததால் அவர்கள் தாக்கியதாகவும் தன் வறுமை மற்றும் ஆகாரம் இன்மை காரணமாக இத்தனை நாட்களாக அதை சகித்துக் கொண்டு இருந்ததாகவும் ராஜம்மாள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ரோஸ்மியாபுரம் காப்பகத்தில் நிர்வாகத்தை கவனித்து வரும் பாதிரியார் ஜோசப் மற்றும் ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







