--- --:--:-- --

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம்..!

4

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் தன்னை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த விவகாரத்தில் ஆளுநர் 3 அல்லது 4 நாட்களில் முடிவெடுப்பார் என தெரிவித்ததையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

ஆனால் உச்சநீதி மன்றத்தால் வெளியிடப்பட்ட உத்தரவு நகலில் நான்கு நாட்கள் என்பதற்கு பதிலாக நான்கு வாரங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே பேரறிவாளன் தரப்பில் இன்றையதினம் வழக்கறிஞர் பிரபு இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அப்போது தமிழக ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் ஆளுநர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் எடுத்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

 

அதற்கு துஷார் மேத்தா இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார் என தெரிவித்தார். இதை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Right Menu Icon