--- --:--:-- --

57 வது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்..!

5

வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைக்க தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உடன் மத்திய அரசு பத்தாவது கட்டமாக பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது வேளாண் சட்டங்களை முற்றிலும் திரும்பப்பெற வேண்டுமென விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

 

ஆனால் வேளாண் சட்டங்களை அமல் படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். மேலும் ஒரு குழு அமைத்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசு எடுத்துரைத்த அம்சங்கள் குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுடன் கலந்தாலோசித்து அறிவிப்பதாக விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் மத்திய அரசிடம் தெரிவித்து உள்ளன.

 

இதனையடுத்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாய சங்க பேச்சுவார்த்தையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon