வேளாண் சட்டம் தொடர்பாக வரும் 22 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும்..!
வேளாண் சட்டம் தொடர்பாக எதிர்வரும் 22 ஆம் தேதி பேச்சுவார்த்தை தொடரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் 10 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி டெல்லியில் விவசாயிகள் நடக்கும் போராட்டம் இரண்டு மாதங்களை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் அரசுக்கு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பத்தாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் சட்டத்தை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க அரசு முன் வந்ததாகவும் அதுவரை போராட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் அதைத் தாங்கள் ஏற்கவில்லை என்றும் விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க அரசு முன்வந்தது. இது குறித்து ஆலோசித்து தெரிவிப்பதாகவும் விவசாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.






